4800 கேரள லாட்டரி சீட்டுகளுடன் வியாபாரி கைது.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான கோபாலபுரம் சோதனை சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர் அப் போது தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வால்பாறை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ 1 லட்சத்து74, ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4800கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.