நீலகிரி மாவட்ட 71 வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா பல்வேறு கிராமங்களில் கோலகாலம் கொண்டாடப்பட்டது

நீலகிரி மாவட்டம் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. இரண்டாம் நாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் தலைமையில் கூட்டுறவு வார விழா கூடலூர் பகுதியில் நடைபெற்றது, மூன்றாம் நாள் கோத்தகிரி கோழிக்கரை பகுதியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது, நான்காம் நாள் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட அப்புகோடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. விழா நிகழ்வுகளில் கூட்டுறவுத்துறை அலுவலர் கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தஇரா. தயாளன் எம்.ஏ.பி.எல் அவர்கள் தலைமையில் என் சி எம் எஸ் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர். சூரிய நாராயணன் என்பவர் கலந்து கொண்டு கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரை யாற்றினார். முன்னதாக ரா. கௌரிசங்கர் கூட்டுறவு சார்பதிவாளர் வரவேற்புரை வழங்கினார். இந்த கருத்தரங்கத்தில் மேலாண்மை இயக்குனர்/துணைப்பதிவாளர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தே. சித்ரா, துணைப்பதிவாளர் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி குமாரசுந்தரம், துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சி அய்யனார், துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) கமல் சேட், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இந்த கருத்தரங்கத்திற்கு துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் தா. மு முத்துக்குமார் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி உரையாற்றி விழா நிறைவு பெற்றது.