பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டிய வி.சி.க. மாவட்ட செயலாளர் கைது. கோவை சிறையில் அடைப்பு.

கோவை; பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம்அங்குள்ள வடக்கி பாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் கூடுதல் எஸ்.பி. புகார் செய்தார் இதன் பேரில் போலீசார் அசோக் குமார் மீது தகாத வார்த்தையால் திட்டுதல், மிரட்டல், பெண்ணை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அப்போதுஅவரை வருகிற 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். .