திருச்சியில் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதன் ஒரு பகுதியாக இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல் துறை அமைச்சரும்மானஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, காட்டூர் புனித லோமினால் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தொகுதி சஞ்சீவி நகர் சமுதாயக்கூடம் உட்பட்ட இடங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்மை நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் அப்போது அவர் கழக நிர்வாகிகளுடன் எவ்வாறு பணி செய்வது என்று அறிவுறுத்தினா,அதிகாரிகளிடம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை குறித்தும் கேட்டறிந்தார் மேலும் இந்த முகாமில் இன்று சுமார் 75 பேர் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாற்றுதல் பெயர் மாற்றுதல், ஆகியவைகளை திருத்திக் கொண்டனர் மேலும் இந்த ஆய்வின்போது மாநகர செயலாளர் மண்டல தலைவருமான மதிவாணன் பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், சிவக்குமார், மற்றும் பாக முகவர்கள் வட்ட கிளைகழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.