கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது 65) இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-வயதுசிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கசாமிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம்அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0