கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் 31 ஆம் ஆண்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சந்திரனுக்கு பெரிய அகல் விளக்குகள் ஏத்தி வழிபாடு செய்தனர் தொடர்ந்து சிவலிங்கத்துக்கு அன்னத்தினாலும், காய்கறிகள், கனிகள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு முன்னாள் அமைச்சரும், மேயருமான செ. ம. வேலுச்சாமி அவர்கள் மூலம் துவக்கப்பட்ட இந்த அண்ணா அபிஷேக நிகழ்வு கடந்த 30 ஆண்டுகளாக இத்திருக்கோவில் நடைபெற்று வருகிறது. சூலூர் மற்றும் சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்களும் பொதுமக்களும் திரளாக வருகை தந்து அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்ட வைத்தியநாதப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர் தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0