நீலகிரி மாவட்டம்
இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கிரசென்ட் பள்ளி மாணவ மாணவிகள் இயற்கைக்கு உகந்த மர நாற்றுகள் மற்றும் மூலிகை தாவரங்களை வழங்கினர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகவும், இயற்கை சூழல் நிறைந்த மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. அண்மைக்காலமாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தை கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிறப்பான கல்வி பணியுடன் சமுக பணியையும் செய்துவரும் உதகையில் இயங்கி வரும் கிரசன்ட் பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கையை பாதுகாக்கும் வகையில் உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வருகை புரிந்த சுற்றுலா பயணிகளுக்கு இயற்கைக்கு உகந்த மர நாற்றுகள் மற்றும் மூலிகை தாவரங்களை வழங்கி இயற்கையை காப்போம் என விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் என். எஸ் நிஷா பள்ளி தாளாளர் பாருக் முனனிலையில் துவக்கி வைத்து குழந்தை களுடன் உரையாடினார் இதில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மர நாற்றுகள் மற்றும் மூலிகை தாவரங்களை பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி மரங்கள் இயற்கைக்கு இன்றியமையாததாக உள்ளது என்பதையும் சுற்றுலா பயணி களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர், க்ரசெண்ட் பள்ளி ஆசிரியர்கள் கிரசன்ட் பள்ளி குழந்தைகள், நீலகிரி உதகை காவல்துறையினர் மற்றும் சுற்றுலா கிரசன்ட் பள்ளி குழந்தைகளிடமிருந்து மரக்கன்றுகளை குழந்தைகள் தின நினைவாக பெற்று சென்றனர், நிகழ்ச்சி நிறைவாக க்ரசென்ட் பள்ளி தாளாளர் பாரூக் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0