நீலகிரி மாவட்ட குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரளியார் பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் பகுதியில் பல ஆண்டுகளாக காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சோதனை சாவடியானது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சில நிர்வாக காரணங்களுக்காவும் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கல்லாரில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை நீலகிரி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா, இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஷ், மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர், புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை சாவடியில் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 2 கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தின் எண்ணை அடையாளப்படுத்தும் (Automatic Number Plate Recognition) என்ற அதிநவீன மென்பொருள் கொண்டவை. கல்லார் சோதனை
சாவடியில் 24 மணிநேரமும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்றும் 3 தமிழ்நாடு சிறப்புப்படை காவலர்கள் அலுவலில் இருந்து வாகன தணிக்கையை மேற்கொள்வார்கள் என்றனர், இந்த புதிய காவல்துறை சோதனை சவாடி கல்லார் பகுதியில் திறக்கப்பட்டதால் கலர் கபகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.