கோவை நவ 14 சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுசிறப்பு டாக்டராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி (வயது 53) நேற்று காலை 10-30 மணியளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் டாக்டர் பாலாஜியிடம் தகராறு செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்ற தன்னுடைய தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று வாக்குவாதம் செய்தார். சரியான முறையில் தான் உங்கள் தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று டாக்டர் பதில் அளித்தார். இருந்தபோதிலும் ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாக்டர் பாலாஜியைசரமரியாக குத்தினார். அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன டாக்டர் என்ன செய்வது? என்று தெரியாமல் அலறி துடித்தார் . அங்கிருந்த நோயாளிகள்உறவினர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஓடி வந்தனர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த டாக்டர் பாலாஜியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய அந்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட கையில் வைத் திருந்த கத்தியை தூக்கி எறிந்து விட்டு மருத்துவமனை வளாகத்தில் நடந்து வெளியே சென்றார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளிகள், வெளியே நின்ற நோயாளிகளின் உறவினர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அங்குள்ள ஒரு அறையில்அடைத்து வைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கிண்டி போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணை அவர் பெயர் விக்னேஷ் ( வயது 25 )என்பதும் சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங் களத்தூர், காமராஜர் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரதுதாயார் பிரேமா (வயது 51) கடந்த 6 மாதங்களாக கிண்டி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்துள்ளார் .நோய் முற்றிய நிலையில் அவருடைய தாயாரை வீட்டுக்கு அழைத்து சென்ற விக்னேஷ் நேற்று காலையில் காய்கறி வெட்டும் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். . டாக்டர் பாலாஜியை சந்தித்து வாக்கு வாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் குத்தி இருக்கிறார். தனது தாயார் வீட்டில் வலியால் துடிப்பதை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் “ஹீமோ “சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததே தாயாரின் இந்த நிலைக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார் .அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் .இதை கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள்,நர்சுகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள டீன் அலுவலகத்துக்குமுன் மருத்துவர்களும், செவிலியர்களும் பாதுகாப்பு கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0