நீலகிரி மாவட்ட உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 222 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட உதகை ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய மக்களின் பலவி தமான குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பொது மக்களிடமிருந்து 222 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களி டமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளி களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார், மேலும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார், இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் என
மொத்தம் 14 நபர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், நீலகிரி
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றக் குழுமம் சார்பில் தேசிய தன்னார்வ இரத்த தான முகாம் – 2024ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்ட இரத்த வங்கிகளுக்கு தன்னார்வ இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடத்திக் கொடுத்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்து அவர்களின் வாழ்வை ஒளிரச் செய்வதற்காக உதகை வட்டத்தைச் சேர்ந்த 13 ஒருங்கிணைப்பாளர்களுக்கும், குன்னூர் வட்டத்தைச் சேர்ந்த 04 ஒருங்கிணைப் பாளர்களுக்கும், கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த 03 ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என மொத்தம் 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடங்க ளையும் வழங்கி பாராட்டினார், மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து
1 பயனாளிகளுக்கு வீட்டு வரி மானியத்தொகை ரூ.1,534/- பெறுவதற்கான ஆணை யினையும், 1 பயனாளிக்கு ரூ.2,400/- மதிப்பில் கண் கண்ணாடி மானிய விலையில் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .நாராயணன், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் மரு.ரவிச்சங்கர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) .கல்பனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
அலுவலர் திரு.சுரேஷ் கண்ணன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர்
(பொ) . இந்திராகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து
கொண்டனர்.