கோவை அருகே உள்ள சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் பூர்ணிமா ( வயது 32) இவருக்கும்விவேக் என்பவருக்கும் 20 – 11- 2022 இன்று திருமணம் நடந்தது திருமணத்தின் போது பெண் வீட்டார் 56 பவுன் நகையும் ரு 1.50 லட்சம்ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர்இந்த நகைகளை கணவர் வீட்டார் வாங்கி வைத்துக் கொண்டனர்.. மேலும் 10 பவுன் நகை வாங்கி வருமாறு கூறி கணவர் விவேக் மாமனார் பாஸ்கரன் மாமியார் சசி,நாத்தனார் ஹேமா ஆகியோர் பூர்ணிமாவை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது இது குறித்து பூர்ணிமா கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி விசாரணை நடத்தி கணவர் விவேக், மாமனார் பாஸ்கரன், மாமியார் சசி, நாத்தனார் ஹேமா மீது வரதட்சணை கொடுமை உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0