ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி. இழப்பீடு வழங்காததால் கோவை நீதிமன்றம் அதிரடி. உத்தரவு

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்மலை குமார். விவசாயி இவருக்கு சொந்தமான 4.30 ஏக்கர் விவசாய நிலம் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்ட கையகப்படுத்தப்பட்டது. இதற் காக அவருக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்ததால் அவர் கூடுதல் இழப்பீடு தொகை வழங்க கோரி 1992 – ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விவசாயி பொன்மலைகுமாருக்கு வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகையாக ரூ. 3 லட்சத்து 26 ஆயிரம் வழங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உத்தரவு பிறப் பித்தார் .ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி அவருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனிதாசில்தார் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோவை கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோர்ட் அமீனா தலைமையில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள கோவை கலெக்டர் அலுவலகத்தில் பழைய கட்டிடம் முதல் மாடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர் .பின்னர் கோர்ட் உத்தரவை காட்டி ஜப்தி செய்ய வந்துள்ளதாக அமீனா தெரிவித்தார். உடனே அலுவலக ஊழியர்கள்இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து இழப்பீடு வழங்க 45 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. .அதை ஏற்று அமீனா மற்றும் கோர்ட் ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். விவசாயிக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்பட்டதால்அரசு அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழி யர்கள் சென்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.