கோவை சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் நேற்று சூலூர் பிரிவு -முத்து கவுண்டர் புதூர், பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 363 கிலோ தடை செய்யப் பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருப்பூர், பூலுவ பட்டி , பாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ் பாண்டி ( வயது 39) என்பது தெரிய வந்தது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0