கோவையில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வணிக வளாகம் இன்று இடிப்பு. மாநகராட்சி நடவடிக்கை.

கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.. இதில் 25 கடைகள் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஆலய நிர்வாகத்தின் சார்பில் கோவை மாநகராட்சியில் புகார் செய்யப்பட்டது. இதை யடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று காலையில் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கடந்த வாரம் அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு துண்டிக் கப்பட்டது.இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.