கோவை மாநகர போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் வருகையை யொட்டி கனரக வாகனங்கள் நாளை (செவ்வாய்) மற்றும் நாளை மறுநாள் (புதன்) ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. வணிக ரீதியான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது .நாளை காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டுனர்கள் அவிநாசி சாலையை தவிர்க்க வேண்டும். 5 – ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேலம் ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு தனியார் பஸ்களும் நீலாம் பூரிலிருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் சுங்கம் ரவுண் டானா ,வெஸ்ட் கிளப் ரோடு, எல்ஐசி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம். அவிநாசி சாலை வழியாக திருப்பூர் ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு -தனியார் பஸ்கள் காந்திபுரத்திலிருந்து சக்தி ரோடு கணபதி வாட்டர் டேங்க் விளாங்குறிச்சி காளப்பட்டி நால்ரோடு தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் ராமநாதபுரம் சந்திப்பு சுங்கம் சந்திப்பு கிளா சிக் டவர் , அரசு மருத்துவமனை குட்ஷெட்ரோடு, அவினாசி ரோடு மேம்பாலம் புரூக் பாண்ட் ரோடு மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம் . ஹோப் காலேஜ்,பீளமேடு மற்றும் எஸ். என். ஆர் ஆகிய பகுதிகளை தவிர்க்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.. சக்தி சாலையில் இருந்து கணபதி காந்திபுரம் வழியாக அவினாசி ரோடு செல்லும் செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியில் இருந்து இடதுபுறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம். சக்தி சாலையில் இருந்து திருச்சி ரோடு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி ஆவராம்பாளையம் மேம்பாலம் ,மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி சந்திப்பு புலியகுளம் மற்றும் ராமநாதபுரம் சந்திப் பு வழியாக செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0