அரசு விழாக்களில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை.

கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபடுகிறது. பின்னர் அவர் கோவை விளாங்குறிச்சி ஐ.டி. வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதை யடுத்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார்.மாலை 4:30 மணிக்கு பொற்கொல்லர்களைசந்தித்து பேசுகிறார்.நாளை மறுநாள் 6 -ந் தேதி காலை 9 மணிக்கு செம்மொழி பூங்காவில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்கிறார்..தொடர்ந்து 9 – 45 மணிக்குகோவை மத்திய சிறை வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். 10 – 30மணிக்கு அங்கிருந்து விமான நிலையம் புறப்படுகிறார்.இந்தப் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கோவை வந்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், பாடி,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.முதலமைச்சர்வருகையை முன்னிட்டு வெளி மாவட்டங் களில் இருந்தும் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.