கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வழியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 56 )விவசாயி. இவரது மனைவி சுதா. கடந்த 30ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டுதிறந்து கிடந்தது. அதில் இருந்த 100பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆ சாமிகள்திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் பாளையம் போலீசில்பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத் தை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பார்வையிட்டார். கொள்ளை யர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0