மருதமலை முருகன் கோவிலில் ரூ.48.50 லட்சம் உண்டியல் வருமானம்.

கோவை அருகே உள்ள அருள்மிகு மருதமலை சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மாதந் தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம் .அதன்படி இந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் மொத்தம் உள்ள 14 நிரந்தர உண்டியல்களில் ரூ.47 லட்சத்து 16 ஆயிரத்து 504 – ம் திருப்பணி உண்டியலில் ரூ.1,57,188 -ம், 102 கிராம் தங்கமும் , 1 கிலோ 349 கிராம் வெள்ளியும் 2 கிலோ 553 கிராம்பித் தளையும் இருந்தது .மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன் சுகன்யா ராஜரத்தினம் ,துணை ஆணையர் செந்தில்குமார் ஈச்சனாரி கோவில் உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் மற்றும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்..