காரில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல். கேரளா வியாபாரி கைது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் தீவிர கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுக்கரை போலீசார் நேற்று வாளையார் அருகே சென்று கொண்டிருந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 22 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் சாக்லேட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்திச் சென்ற கேரளாவை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 45) கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.