தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கை 1.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/ நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இரு மடங்காக வசூலிப்பதை பணியாளர்களின் நலம் கருதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.,2. கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடாத பொருட்களை இறக்கி விற்பனையாளர்களை விற்பனைக்குறியீடு செய்வதை கைவிட வேண்டும்., 3.தமிழக முழுவதும் உள்ள நியாய விலை கடை விற்பனையாளர்களின் சொந்த மாவட்டத்துக்கும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்தில் அவர்கள் குடும்பம் உள்ள ஒன்றியத்துக்கு மாற்றிட தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்கின்ற மூன்று அம்ச கோரிகளை வலியு றுத்தி நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் கடந்த மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது தொடர்ந்து நான்காவது நாளாக சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட 19 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணி யாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட ஒன்றிய துணைத் தலைவர் பால்ராஜ் தலைமையில் செயலாளர் ராகவன் முன்னிலையில் போராட்டத்தில் சூலூர் ஒன்றிய உட்பட்ட டாக்பியா அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0