கோவையில் 3 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை.

கோவை சிவானந்தா காலனியில் உள்ள ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலையில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதே போல கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில்வசித்து வருபவர் பொன்துரை.தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வருபவர்வரதராஜன். இவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..இவர் நவ இந்தியாவில் லட்சுமி டூல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.