மழை நீர் தேங்கி சேதமடைந்து வரும் அம்மன்குளம் ஹவுசிங் யூனிட்…

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் செடிகள் புற்கள் முளைத்து இருப்பதால் மழை நீர் தேங்கி கட்டிடம் முழுவதும் ஓதமாகி உள்ளது. வீடுகளுக்கு உட்புறத்திலும் ஓதமாகி வருகிறது. மேலும் சுவர்களின் பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்ந்து வருகிறது.

மேல் தளத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு முன்பு மழை வரும் போதெல்லாம் மழை நீர் வீட்டின் முன்பு தேங்கி விடுவதாக குடி இருப்புவாசிகள் கூறுகின்றனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அச்சம் நிலவுவதாகவும், வீடுகளுக்கு உள்ளும் வெளியிலும் சுவர்களில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்வதால் குழந்தைகளை வைத்து கொண்டு அச்சத்திலேயே இருப்பதால தெரிவிக்கின்றனர். இருப்பதால் பெரிதும் அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.

மழை நீர் மட்டுமல்லாமல் மாடியில் வைக்கப்பட்டு உள்ள உப்புநீர் தொட்டிகளும் சேதமாக இருப்பதால் அதில் இருந்தும் உப்புநீர் வடிந்து சேதத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இது குறித்து கவுன்சிலர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்து உள்ள பொதுமக்கள் உடனடியாக இதனை சரி செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.