சென்னை மாங்காடு சிவன் தாங்கள் சுப்பிரமணி நகர் சேவக மூர்த்தியின் மனைவி சாந்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்துபுகார் மனு கொடுத்துள்ளார். ஆவடி மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி கடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனுவில் சாந்தி கூறியிருப்பதாவது தான் தனியாக 22 வருடங்களாக வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன்.2017 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் அலுவலகத்தில் இருந்தேன்.2018 ஆம் ஆண்டு குன்றத் தூரில் இருந்து சென்று வருவதற்கு கஷ்டமாக இருந்ததால் வீட்டிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் கம்பெனிக்கு ஆட்களை சேர்த்து விட சேவை நிறுவனம் நடத்தி வந்தேன். எனக்கு உதவியாக கணவர் சேவக மூர்த்தி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். வேலை வாங்கி தருவதாக முரளி மற்றும் ராஜா ஆகியோர் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றியதால் தயா என்கிற தயாநிதி என்னுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் பணம் கொடுத்து ஏமாந்து விட்டீர்கள். நீங்கள் வேலைகளுக்கு ஆட்களை எடுங்கள். எனக்கு எல்லாத் துறைகளிலும் உயர் பொறுப்பில் ஆட்கள் இருக்கிறார்கள். எனக்கூறி அந்தந்த துறைக்கு அழைத்துச் சென்று பணி நியமன ஆணை மூலம் உத்தரவை வழங்கினார். அதன்படி சான்றை சரிபார்த்தல் எனக்கு கூறி 18 பேருக்கு மேல் ஒவ்வொருவரிடமும் தயா என்கிற தயாநிதி இடம் ஆக்சிஸ் வங்கி கணக்கில் 98 லட்ச ரூபாய் போட்டுள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட தயநி தி ஒருவருக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தது கண்டுபிடித்தோம். இது குறித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரி ஜூட் மேரி வழக்கு பதிவு செய்து தலை மறைவாக ஒளிந்து கொண்டிருந்த தயா என்கிற தயாநிதி வயது 35. தகப்பனார் பெயர் மாதையன் தடையன் வளைவு அவதார் கிராமம் ரெட்டியூர் ஜலகண்டாபுரம் சேலம் என்ற பகுதியில் கைது செய்தனர். போலீசார் அவனை பிடிக்கும் போது நீங்கள் என்னை பிடித்தால் விபரீத விளைவுகள் சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளான். போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0