கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனையா? அதிகாரிகள் திடீர் சோதனை.

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து சென்று மருந்தகங்கள், கிளினிக்குகள், மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக எந்தவிதகருக்கலைப்பு மருந்து மாத்திரைகளும் விற்பனை செய்யப் படவில்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் கடை உரிமையாளர்கள் மற்றும் வியா பாரிகளிடம் டாக்டர்களின் ஒப்புதல் இல்லாமல் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். டாக்டர்கள் ஒப்புதல் இல்லாமல் யாராவது விற்பனை செய்தால் உடனே மாவட்ட சமூக நலம் மற்றும் நலப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார்கள்.