நீலகிரி மாவட்ட பாஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் எச் ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக அரசை கண்டித்து பேட்டி??

நீலகிரி பாரதிய ஜனதா கட்சித் தமிழ்நாடு சார்பில் நீலகிரி மாவட்ட உதகை சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை 2024 மாவட்ட பயிலரங்கம் கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார், விவசாய அணி துணைத் தலைவர் சௌந்தரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் தர்மன், பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மண்டல தலைவர் பிரவீன், கூடலூர் பொதுச் செயலாளர் நளினி சந்திரசேகர், கோத்தகிரி பொதுச் செயலாளர் கே. ஜே. குமார், நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், சதீஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் துவங்கியது, நிகழ்ச்சி முன்னுரை மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஷ், கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா அவர்கள் விழா துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றினார், அங்கு நடைபெற்ற பாஜக நீலகிரி நிர்வாகிகள் அனைவரிடமும் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தான அனைத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,தொடர்ந்து நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார், இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட குன்னூர் கோத்தகிரி உதகை கூடலூர் போன்ற பகுதியில் இருந்து மாவட்ட, நிர்வாகிகள் நகர, நிர்வாகிகள், பேரூராட்சி ஊராட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர், இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா… தமிழகத்தில் காவல்துறையினர் கஞ்சா போன்ற போதை பொருட்களை பிடிப்பதை குறித்து செலுத்தும் கவனத்தை சிந்தடிக் போதை பொருள் பயன்பாட்டை கவனிக்க தவறி வருகிறது. நான் கடந்த மூன்று வருடமாக மண்ணடியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்கி உள்ளதாக புகார் அளித்து வருகின்றேன். ஆனால் இதுவரை தமிழக காவல்துறையினர் ஒருவரையாவது கைது செய்திருப்பதாக செய்தி வந்துள்ளதா, சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்தவர்கள் மற்றும் கொடிக்கம்பம் ஏற்றிய அவர்களை கைது செய்ய முனைப்பு காட்டும் தமிழக காவல்துறையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் செயல்பாடுகள் பூஜ்ஜியத்தில் தான் உள்ளது என்று கண்டனத்துடன் தெரிவித்தார்? மேலும் அவர் கூறுகையில், சென்னையில் தற்பொழுது பெய்து வரும் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையமானது கூறியுள்ளது ஆனால் மழை நீர் வடிகாலுக்காக நான்காயிரம் கோடி நிதியை பெற்றுள்ளது. அதில் 90 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் அதில் 40 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும், தென்மேற்கு பருவமழை நாட்களில் பெய்து வரும் கனமழை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும், என்று கூறினார்,தொடர்ந்து விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது ஐந்து பேர் உயிரிழந்தது மட்டுமின்றி 250 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று விமானப்படையின் சாகச நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பொழுது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., திராவிட அரசாங்கம் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்ளும் ஒரு நடைமுறையை பின்பற்றுபவர்கள் ஒருவர் முதுகை இன்னொருவர் சொரிந்து விடுவது என்பதைப் போன்ற செயல்தான் இந்த திராவிட மாடல் அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவறான விஷயங்களை மத்திய அரசு மேல் காட்டினால் தான் நம்மை துணை முதல்வர் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலை புதியதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே அதை எல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து ஆனது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதா மனிதனின் அஜாக்கிரதையால் நடைபெற்றதா அல்லது சதி வேலையா என்பதை குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்று உதயநிதி ஸ்டாலின் ரயில்வே துறைக்கு தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர் தான் காரணம் என கூறி வருகிறார். மத்திய அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், அனுபவம் இல்லாத புதியதாக விளையாட்டாக அல்ல விளையாட்டு அமைச்சராக இருந்தவர் தற்பொழுது துணை முதல்வராக அனுபவம் இல்லாமல் பொறுப்பேற்று இருக்கிறார், என்று பேசினார் செய்தியாளர் சந்திப்பின்போது நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.