ஆவடி திருவேற்காடு பூந்தமல்லி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் அமைச்சர் கே.என் நேரு பார்வையில் தீவிரம்!

ஆவடி திருவேற்காடு பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் மழை நீர் அகற்றும் பணிகளை அமைச்சர் கே.என். நேருபார்வையிட்டு துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கினார். பருவ மழை தொடங்கியதை அடுத்து ஆவடி திருவேற்காடு பூந்த மல்லி ஆகிய பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. பள்ள மான பகுதிகளில் ஆவடி மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட வெள்ளானூர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு சேக்காடு ரயில் நிலைய சுரங்கப்பாதை உள்ளிட்ட பல இடங் களில் மழை வெள்ளம் தேங்கின்றது. இதனை ராட்சத மோட்டார் களை வைத்து மழை வெள்ளத்தை அப்புறப் படுத்தினர். பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆவடி மேயர் உதயகுமார் மாநகராட்சி ஆணையாளர் கந்தசாமி ஆகியோரும் பார்வையிட்டனர். பின்பு திருவேற்காடு நகராட் சிக்கு உட்பட்ட திருவேற்காடு பேருந்து நிலையம் ராஜாங்க்குப்பம் எஸ் பி நகர் குடியிருப்பு நூம்பல் மற்றும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதை பார்வையிட்டு அமைச்சர் கே என் நேரு பார்வை யிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் நகராட்சி தலைவர் என் இ கே மூர்த்தி இருந்தார். இதேபோல் பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் குமணன் சாவடி கரையான் சாவடி பகுதிகளில் மழைநீர் தேங்கியதை நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத மின் மோட்டார்கள் பொக்லைன் இயந்திரங்கள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் வேலை செய்வ தை அமைச்சர் கே என் நேரு பார்வை யிட்டார். உடன் தொகுதி எம் எல் ஏ கிருஷ்ணசாமி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.