திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சி அசோக் நகரில் 30000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யும்,கிளியூர் ஊராட் சியில் ரூ 14,31,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் மற்றும் ராசாம்பேட்டையில் 10000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், பத்தாள பேட்டை ஊராட்சியில் நியாய விலைக் கடை மற்றும் செட்டியார் பேட்டை – மெக்க நாச்சியம்மன் கோவில் அருகில் கிளி வாய்க்காலில் குறுக்கே பாலத்தையும், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி குமரேசபுரம்-உய்யக்கொண்டான் ஆற்றில் குறுக்கே பாலம் மற்றும் திருவேங்கடநகரில் 100000 கொள்ளளவு கொண்ட மேல்நீர்த்தேக்க தொட்டியும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.எம்.கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், வேங்கூர் கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன், கிளியூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர் பாரதி, ஊராட்சி அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள பொதுமக்கள் ஒன்றாக கூடிய அமைச்சரிடம் தங்கள் பகுதிகளுக்கு சாலை அமைத்து தருமாறு மனு கொடுத்தனர் அமைச் சரும் சாலை அமைத்து தருவதாக உறுதி கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0