கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில பகுதிகளில் லேசாக மழை பெய்தது. பிற்பகல் மாலை3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி- மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கோவை மாநகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கோவையின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஆறாக ஓடியது குறிப்பாக அவிநாசி ரோடு, ,திருச்சி சாலை கோவை ரயில் நிலையம் ரோடு,குட் ஷட் ரோடு, சுங்கம், ராமநாதபுரம், ஒலம்பஸ், புலியகுளம் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை அதேபோன்று அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை .அனைத்து வாகனம் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக அவினாசி சாலை மேம்பாலத்தில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது அது போன்று அரசு மருத்துவமனை முன்பு ஏற்பட்ட நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி திணறினார்கள். அத்துடன் கோவை சிவானந்த காலனியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. அப்போது பிரஸ் காலனியிலிருந்து காந்தி புரத்துக்கு 35 பயணிகளுடன் தனியார் டவுன் சென்றது .அந்த பஸ் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது அங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றதால்நடுவழியில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். அத்துடன் அவர்கள் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே இது குறித்து கோவை வடக்கு தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கயிறு கட்டி அந்த பஸ்சுக்குள் இருந்து 35 பயணிகளை பத்திரமாக மீட்டனர். கணுவாய், தடாகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சங்கனூர் ஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இந்த ஓடையின் குறுக்கே கணுவாய் அருகில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதை அந்த பகுதி மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்..மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசாருடன், இதர போலீசாரும் கொட்டும் மழையில் மழைக்கோட்டு அணிந்தவாறு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும்பணியில் ஈடுபட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0