திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி பஞ்சப் பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப மாநகராட்சி மேயர் திரு.மு. அன்பழகன் மாநகராட்சி ஆணையர் திரு. வே.சரவணன்.இ.ஆ.ப. நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.