திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் காது மூக்கு தொண்டை மற்றும் உடற்கூறுயியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் தலைமை தாங்கினார். கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ஆர்சியா பேகம் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சி வகுப்பில் தானமாக தரப்பட்ட பதப்படுத்தப்பட்ட மனித உடல்களை கொண்டு உலகப் புகழ்பெற்ற காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ஜானகிராமன் டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். பின்னர் அரசு மருத்துவ மனை டீன் குமரவேல் கூறும்போது, முகத்தில் காயங்கள் ஏற்படாமலேயே மூக்கு துவாரத்தின் வழியாக கருவிகளை செலுத்தி மூளையின் அடிப்பகுதியில் உள்ள கட்டிகள் அல்லது வேறு பிரச்சினைகளை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சை பயிற்சி இங்கு அளிக்கப்பட்டது. தமிழகத்திலே இதுதான் முதல்முறையாக நடை பெறுகிறது. குறிப்பாக மண்டை ஓட்டை உடைக்காமல் அறுவை சிகிச்சை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் கற்று பயனடைந்தனர். இந்த பயிற்சிக்காக காஷ்மீர், ஆந்திரா, கன்னியாகுமரி, கேரளா என இந்தியா முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுகலை மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர் என்றார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0