திருச்சியில் மது கடைகளை மூட வலியுறுத்தி அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மது கடைகளை மூட வலியுறுத்தி வயலூர் சாலையில் உள்ளசீனிவாச நகரில் உள்ள மது கடையை அகற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மாநகர் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் உடனடியாக தமிழக அரசு மது கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை அடுத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக் கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.