சேலம்; 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் அவர்கள் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்த போது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சேலம் இருப்பு பாதை காவல் நிலையம் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அலுவலலி ல் இருந்த காவல் ஆளி நர்கள் சகிதம் மேற்படி வண்டியினை சேலம் ரயில் நிலைய நடைமேடை 5ல் அதி காலை 10.00 மணிக்கு அட்டென்ட் செய்த போது மேற்படி வண்டியில் இருந்து இறங்கி நடை மேடையில் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளை விசாரிக்கும் போது அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு பெற் றோருக்கு பிரியாமல் வந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலே குறிப்பிட்ட இரண்டு சிறுமிகளின் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தினை தொடர்பு கொண்டு விசாரிக்க அவர்கள் காணாமல் போனது சம்பந்தமாக திருவனந்தபுரம் பாலிக்கல் காவல் நிலையத்தில் பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெண் சிறுமிகளின் பாதுகாப்புக் கருதி இருவரையும் பெண் தலைமை காவலர் மூலம் சேலம் மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் வசம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.துரிதமாக செயல்பட்டு இரண்டு சிறுமிகளையும் மீட்ட ஆய்வாளர் சேலம் மற்றும் காவல் ஆளினர்களை காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக் க்ஷித் இருப்புப்பாதை தமிழ்நாடு மற்றும் ஈஸ்வரன் காவல் கண்காணிப்பாளர் சென்னை. ஆகியோர் பாராட்டினார்கள். ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்பந்தமான புகார் களுக்கு 24×7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸ்அப் எண் 9962500500 என்ற என்னை தொடர்பு கொள்ளவும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0