கோவை திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிர் புறம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பிரதஷ்டை தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அசனபண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் அசன பண்டிகை நேற்று நடைபெற்றது.நேற்று காலைஆலயத்தில் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.இதில் காருண்யா பல்கலைக்கழக வேந்தரும்,இயேசு அழைக்கிறார்,சுவிசேஷ ஊழியத்தின் தலைவருமான பால் தினகரன் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடத்தினார்..பாதிரியார்கள் ராஜேந்திர குமார் ,சற்குணம், , சுரேஷகுமார், ஆகியோரும் சிறப்பு ஜெயம் ஜெபம் செய்தனர்.முன்னதாக டாக்டர் பால் தினகரனுக்கு ஆலயத்தின் சார்பில்செயலாளர் பாக்கியசெல்வன் தலைமையில் சால்வைகளும், மலர் கொத்தும் கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆலய வளாகத்தில்25 ஆயிரம்பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.. இதற்கா 3,500 கிலோ ஆட்டிறைச்சி, 4 ஆயிரம் கிலோ அரிசி பயன்படுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தபிரபல சமையல் கலைவல்லுனர் கோவில் பிச்சை தலைமையில் 200 சமையல் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.உணவு சமைப்பதற்கு ராட்ச அண்டாக்கள், பயன்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாதம்,மட்டன் குழம்பு,சாம்பார், ரசம்,வாழைக்காய் கூட்டு, பாயாசம் ஆகியவை பரி மாறப்பட்டது. பார்சலில் உணவு வாங்குபவர்களுக்கு டோக்கனுக்கு ரூ 600 வீதம் 3 ஆயிரம்டோக்கன் விநியோகிக்கப்பட்டது. மேலும் அசன பண்டிகை முன்னிட்டு கோவையில் உள்ள 50க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப் பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உணவு சாப்பிட வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு திருச்சி ரோட்டில் உள்ள 3 பள்ளிக்கூடங்களின் வளாகங்கள் பயன் படுத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆலய தலைவர்பாதிரியார் ராஜேந்திர குமார், செயலாளர்பாக்கிய செல்வன்,பொருளாளர் காட்வின் கோயில்,பாதிரியார்கள் சற்குணம் சுரேஷ்குமார் தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பொருளாளர் டி.. எஸ். அமிர்தம்,மற்றும் பி.சி – டி. சி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0