பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்களை கவிழ்க்க சதி!

பொன்னேரி:டெல்லி கொல்கத்தா மார்க்கமாக பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் ஃபிஷ் பிளேட் மற்றும் போல்ட் நட்டுகள் ஆகியவைகள் தனித் தனியாக கழற்றி விடப்பட்டிருந்தன. இது பற்றிய பொதுமக்கள் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக்ஷித் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் போலீஸ் படை யினரும் மோப்பநாயம் கொண்டுவரப்பட்டது. அவை சிறிது தூரம் ஓடி களைத்து போய் மூச்சிரைக்க நின்றுவிட்டது. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் லோக்கல் யூனிட் மின்சார ரயில்களும் ஆங்காங்கு வழியில் நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில்கள் வழியி லேயே நிறுத்தப்பட்டது. மோப்ப நாயும் யாரையும் கவ் வி பிடிக்கவில்லை . போலீஸ் புலனாய்வு பிரிவினர் துருவித் துருவி விசாரித்த போது இந்த நாச வேலையை செய்தது தற்காலிக ஊழியரும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிரந்தர ஊழியர்கள் இந்த நாச வேலை களை செய்துள்ளனர் என கண்டுபிடித்து உள்ளனர். அந்த வழியே சூப்பர் பாஸ்ட் எக்ஸ் பிரஸ் ரயில்களும் பாசஞ்சர் ரயில் களும் லோக்கல் யூனிட் ரயில்களும் கவிழ்ந்து ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. தகவல் கிடைத்த சற்று நேரத்திற்கு எல்லாம் டி எஸ் பி கர்ணன் மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் தெற்கு ரயில்வே மேலாளர் கோட்டை ரயில்வே மேலாளர் ரயில்வே பாதுகாப்பு படை ஐ ஜி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என ஆர் பி எப் போலீசார் நம்மிடம் கவலையுடன் தெரிவித்தனர். அவர்களுடைய கவலை எல்லாம் எவன் செத்தால் நமக்கென்ன நமக்கு சம்பளம் வந்துவிட்டால் போதுமானது என நினைக்கின்றனர்.