கோவையை அடுத்த வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரில் பழமை வாய்ந்த அருள்மிகு. தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று காலை பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக் கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்து பணங்கள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் .இதன் பேரில் அங்கு வந்த போலீ சார் உண்டியலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர் .மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 4 பேர் கொண்ட கும்பல் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.. கடந்த சில நாட்களாக லாலி ரோடு கருப்பராயன் கோவில், கல்வீரம்பாளையம் விநா யகர் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில், அய்யப்பன் கோவிலிலும் திருட்டு சம் பவம் நடந்துள்ளது. கோவில்களை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என்று போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0