சிபிஐ அதிகாரிகள் போல செல்போனில் பேசிதொழிலதிபர் மனைவியிடம் ரூ 52 லட்சம் மோசடி.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 52) ஜவுளி தொழில் அதிபர். இவரது மனைவி ஆர்த்தி (வயது47 ) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறினார். அதே எண்ணில் இருந்து வீடியோ காலில் ஆர்த்தியை தொடர்பு கொண்டு நீங்கள் பணம் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டு உள்ளதால் விசாரணை நடத்த வேண்டும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. என்று மிரட்டி உள்ளார். அதை நம்பிய ஆர்த்தியிடம் உங்களது வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள். அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். இதை யடுத்து உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.விசாரணை முடிந்த பிறகு அந்த பணத்தை உங்களுக்குஆன்லைன் மூலம் திருப்பி அனுப்பி விடுவோம். என்று கூறியுள்ளனர் வீடியோ காலில் பேசிய நபர்கள் போலீசீருடையில் இருந்துள்ளனர். இதனால் சிபிஐ அதிகாரிகள் தான் பேசுகிறார்கள்என்று கருதிய ஆர்த்தி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 52 லட்சம் அனுப்பினார் .அதன் பிறகு அவர்கள் பணத்தை திருப்பி அனுப்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆர்த்தி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் அருண்,சப் இன்ஸ்பெக்டர் சுகன்யாஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.