கள் விற்பனை செய்த 4 பேர் கைது. காவல் நிலையம் விவசாயிகள் முற்றுகை.

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரமடை பகுதியில் உள்ள சீளியூர், தேக்கம்பட்டி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கிவிற்பனைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக சுப்பிரமணி (வயது 64) முருகானந்தம் ( வயது 54) )திருமூர்த்தி (வயது 54) தேவராஜ் ( வயது 56 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் பாபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காரமடை போலீஸ் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் மனு கொடு த்தனர். அதில் கேரளா , கர்நாடக மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளது. அதுபோன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இது போன்ற தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.