திருச்சி திருவெறும்பூர் அருகில் உள்ள அசூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நூறு பயனாளிகளுக்கு 31.81 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் தவச்செல்வம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் ஓசூர் ஊராட்சி மன்ற தலைவி தாமரைச்செல்வி குமரகுருபரன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0