திருச்சி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். திருச்சி அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு நடந்தது தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும் ,மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டண உயர்வுக்கு காரமான காரணமான உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி கண்டோன்மென்ட் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொ.மு.ச பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தொ.மு.ச பொருளாளர் அப்பாவு, தொ.மு.ச தலைவர் சேகர், சி.ஐ.டி.யு கருணாநிதி மாணிக்கம், மாரியப்பன் , .ஏஐடியுசி கார்த்தி கவுன்சிலர் சுரேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், செல்வம் செல்வராஜ், வையாபுரி உள்பட நூற்றக்கணக்கானோர் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0