தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து என்ஜினியர் தற்கொலை

கோவை ரத்தினபுரி நால்வர்லே-அவுட்டை சேர்ந்தவர் டேவிட்எட்வர்ட் ( வயது 52) சிவில் இன்ஜினியர். இவர் சொந்தமாக கட்டுமான தொழில் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அவர்தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மாலை ரத்தினபுரி 7 – ம் நம்பர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக கோவை நோக்கி ஒரு ரயில் வந்து கொண்டி ருந்தது. தண்டவாளத்தில்ஒருவர் தலை வைத்து படுத்திருந்ததை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தார். இதனை பார்த்த டேவிட் தன்னை சத்தம் போடுவார் என்று நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் மீண்டும் அங்கு வந்த டேவிட் எட்வர்ட்அங்குள்ள மற்றொரு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இருந்தார். அந்த தண்டவாளம் வெயில் காரணமாக சூடாக இருந்ததால் தலைக்கு அடியில் துண்டு வைத்துக்கொண்டு படுத்திருந்தார். அப்போது கோவைரயில் நிலையத்திலிருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் டேவிட் எட்வர்ட் தலைமீது ஏறிச் சென்றது. இதில் அவரது தலை துண்டானது. இது பற்றிய தகவல் இருந்து கோவைரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டேவிட் எட்வர்ட் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில்தலை துண்டிக்கப்பட்டு கிடந்த டேவிட் எட்வர்ட்டின் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.