கோவை டிசம்பர் 24 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கம் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்த வர்பழனி மணி (வயது 48)பிரபல கஞ்சா வியாபாரி. இவரை காரமடை போலீசார் தென் திருப்பதி நால்ரோடு பஸ் ஸ்டாப் அருகே வைத்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர் மதுரை தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் விற்பனை செய்து தெரிய வந்தது .இவர் மீது ஏராள மானகஞ்சா கட்டத்தல்வழக்குகள் உள்ளன. இதையடுத் துகுண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் கிராந்தி குமார் பாடி இவரைகுண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.இதை யடுத்துபழனி மணி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0