திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் எடத்தெரு அண்ணா சிலை அருகே மாநகரமாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் உமாபதி அனைவரையும் வரவேற்றார் இதில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செத்தில்நாதன் முன்னிலை வகித்து பேசினார் இக்கூட்டதில் வர்த்தக அணி இணைசெயலாளர் ராஜாராமநாதன், சிறு பான்மை பிரிவு செயலாலர் பஷீர் அகமது, மாவட்ட இணை செயலாளர் வண்ணை லதா, மாவட்ட துணை செயலாளர்கள் தனசிங், ஹேமலதா, மாவட்ட பொருளாளர் சரவணன், பொதுக் குழு உறுப்பினர்கள் வேதராஜன், லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொது கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக தலைமை நிலைய செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான ராஜசேகரன் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கதிரவன், தலைமை கழக பேச்சாளர் நெல்லை லெட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழிற்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் என்.எஸ் தருண், மாவட்ட மாணவரணி செயலாளர் நாகூர்மீரான் மற்றும் பகுதி ஒன்றிய செயலாளர்கள், மாநகர மாவட்ட அணி செயலாளர்கள், பாலக்கரை பகுதி வட்ட நிர்வாகிகள், திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளின் வட்ட செயலாளர்கள், ஸ்ரீரங்கம் தொகுதி வட்ட செயலார்கள் மற்றும் ஊராட்சி செயலார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் 32 வது வட்ட செயலளார் துரைசாமி நன்றி கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0