கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், இருட்டில் நின்றுகொண்டு இருந்த யானை தீடீரென தாக்கி யதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது நிதி உதவிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்,அதேபோன்று தொண்டா முத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் 24 வயது இளைஞர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இனைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென யானை தாக்க துவங்கியது. இதில் படுகாய மடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது குடும்பத் தினரை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறி, நிதி உதவிகளை வழங்கினார், அவருடன் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,தொண்டர்கள் வந்து இருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0