கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பரமேஸ்வரி. இவருக்குசெல்போன் மூலம் ஒரு புகார் வந்தது .அதில் பேசியவர் காரம டையில் 15 வயது சிறுமியை சிலர் பாலியல் தொழில் செய்யவற்புறுத்தி வருவதாக புகார் கூறினார். இதுகுறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டின் அருகே ஒரு சிறுமி சோகமாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தான் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருப்பதாகவும், தன்னை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி செய்வதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியை ஊட்டியை சேர்ந்த மோனிஷா ( வயது 23 ) பல்லடத்தைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 23) ஆகியோர் காரமடைக்கு அழைத்து வந்து ள்ளனர். இவர்கள் காரமடையைச் சேர்ந்த சேர்ந்த ராஜதுரை (வயது 30) கீதா ( வயது 25) என்ற தம்பதியிடம் சிறுமியை ஒப்படைத்ததுடன் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று வேறு ஒருவருடன் செல்போனில் பேசியுள்ளனர். இதனிடையே தர்மராஜ் சிறுமியிடம் சென்று தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தோழி மூலம் சைல்டு லைனுக்கு உதவி கேட்டு செல்போனில் தகவல் கொடுத்தது தெரிய வந்தது .இதைய டுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற மோனிஷா ,தர்மராஜ், ராஜதுரை, கீதா, பவானி ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0