பருத்தி சார்ந்த இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் சுமார் 110 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு, 12 சதவீத தொழில்துறை உற்பத்தி, 8 சதவீத ஏற்றுமதி மற்றும் சுமார் ரூ.40,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரியை பெற்றுத் தருகிறது. பல சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு பருத்தியின் பலனாகவும், அரசு சரியான நேரத்தில் எடுக்கும் கொள்கை முடிவுகள் காரணமாகவும், தொழில்துறை 6 சதவீத CAGR உடன் வளர்ச்சிய டைந்து வருகிறது. தற்போதைய ஜவுளி வணிக அளவான 162 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2030ம் ஆண்டு வாக்கில், 350 பில்லியன் அமெரிக்க டாலர் ஜவுளி வணிக அளவை அடைய, தற்போதைய மூலப்பொருள் உற்பத்தி திறனான 5.5 பில்லியன் கிலோ விலிருந்து. ஜவுளித்துறைக்கு 20 பில்லியன் கிலோ அளவிற்கு மூலப்பொருட்கள் தேவைப் படும். மேலும் 4 பில்லியன் கிலோ செயற்கை பஞ்சு மற்றும் இழை நூல்கள் தேவைப் படும்.
பிரதமர்.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ஜவுளித்துறை உலகப் போட்டித்தன்மையில் நிலைத்து நிற்கவும், இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடைய மூலப்பொருள் கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல்வேறு கொள்கை முயற்சிகளை கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இதில், தென்னந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மற்றும் சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவரான,S.K.சுந்தரராமன், பருத்தி தொழில்நுட்பத் திட்டத்தை அறிவிக்கவும், செயற்கை பஞ்சு வாங்கும் பொழுது ஏற்படும் உள்பொதிந்த வரியை கிடைக்க பெறவும் மற்றும் செயற்கை பஞ்சு மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணை கள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், மத்திய அரசு கூடுதல் நீண்ட இழை பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியது, ஐக்கிய அரபு நாடுகள், மொரிஷியஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடு களுடன் ஏற்படுத்திய வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், அதன் மூலம் மூன்று இலட்சம் கூடுதல் நீண்ட இழை பருத்திக்கு வரியில்லா இறக்குமதியை அனுமதித்தது, ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.17,822 கோடி ஒதுக்கியது, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவியது, ஜவுளித்துறைக்காக பிரத்யேக சமர்த் திட்டத்தை உருவாக்கி திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. ஆடைத் தொழிலுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.6,006 கோடி ஒதுக்கியது, ஏற்றுமதி செய்யும் போது விதிக்கும் வரியை திரும்ப பெற RoTDEP திட்டத்தை அறிவித்தது. கைத்தறி, விசைத்தறி உள்பட அனைத்து ஜவுளி பிரிவுகளையும் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் வரி ஏய்ப்பை தடுத்தது. அதன் காரணமாக வரி வருமானத்தை ரூ.3600 கோடியிலிருந்து ரூ.35,000 கோடியாக உயர்த்தி அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு குறைந்த விலையில் துணி கிடைப்பதை உறுதி செய்தது, கொரோனா தொற்று காலத்தில் நிதிசுமைகளில் இருந்து தொழில்களை காக்க திட்டங்களை கொண்டு வந்தது, PM MITRA திட்டத்தின் கீழ் தொழில்துறை பூங்கா திட்டம் அறிவித்தது. தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தை அறிவித்து அதற்கு ரூ.1,480 கோடி ஒதுக்கியது, PTA, MEG மற்றும் இதர செயற்கை பஞ்சு மற்றும் அதன் மூலப்பொருட்களின் மீதான குவிப்பு வரியை நீக்கியது உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்த மத்திய அரசை பாராட்டினார்.
பருத்தி தொழில்நுட்ப இயக்கம் 2.0 அறிவிப்பிற்கு முன்னோடியாக அதிக அடர்த்தி கொண்ட நடவு மற்றும் கூடுதல் நீண்ட இழை பருத்திக்கான உள்நாட்டு விதை தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும், வேளாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் கடந்த பருத்தி பருவத்தில் இருந்து சிறப்பு திட்டங்களை அரசு ஏற்கனவே அறிவித்து ள்ளதாக சுந்தரராமன் கூறினார். முதல் கட்டத்திட்டம் 30 முதல் 60 சதவீதம் வரை உற்பத்தித்திறன் அதிகரிப்புடன் வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக இந்திய பருத்திக்கு “கஸ்தூரி பருத்தி பாரத்” என்ற ஒரு பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசும், தொழில்துறையும் இணைந்து எடுத்து வருவதாகவும் சைமா தலைவர் தெரி வித்தார். ஜவுளி வணிகத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க 2023 ஆம் ஆண்டில் “பாரத் டெக்ஸ்” என்ற உலகளாவிய ஜவுளி கண்காட்சியை மத்திய அரசு துணையுடன் ஜவுளி ஏற்றுமதி கழகங்கள் தொடங்கியது. கண்காட்சியில் 3500 வெளி நாட்டு வாடிக்கையாளர்களையும், 4500 கண்காட்சியாளர்களையும் ஈர்த்தது. இந்த பின்னணியில், மத்திய அரசு இரண்டாவது முறையாக அடுத்த நிகழ்வை 2025ம் ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடத்த உத்தேசித்துள்ளது. இது போன்ற கொள்கை முயற்சிகள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளில் துறையின் வளர்ச்சியை தூண்டி ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று சைமா தலைவர் கூறினார்.
செப்டம்பர் 11ல் கோவையில் தொழில் அமைப்புகள் அனைத்து முக்கிய அமைச்சகங்கள் மற்றும் வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் பல்வேறு கலந்துரையாடல் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி யை தெரிவித்தார்கள். மேலும், தொழில்துறையினரின் குறைகளுக்கு உரியகாலத்தில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
, இந்திய ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத் துவதற்கான பல்வேறு கொள்கை முயற்சிகளை குறித்து விரிவாக விவாதித்ததற்காகவும், குறிப்பாக ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அனைத்து வகையான பருத்திக்கும். இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதற்கு, மத்திய அமைச்சருக்கு சைமா அமைப்பு நன்றி பாராட்டினார்.
ஜி.எஸ்.டியின் கீழ் செயற்கை பஞ்சு மதிப்புச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார் முன்னதாக, சைமாவின் 65ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2024-25 வருடத்திற்கு, தலைவராக, சிவா டெக்ஸ்யார்ன் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் தேர்ந்தெடுக்கப் பட்டு ள்ளார். மருத்துவம் படித்தவர். மேலும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் இருந்து எம்.பி.ஏ. முதுகலை பட்டம் பெற்று. அகில இந்திய அளவில் தொழில்நுட்ப ஜவுளித் துறையிலும் தொழில்நுட்ப கல்வியிலும் அனைவராலும் அறியப்பட்டவர். மேலும், அவர் Firebird Institute of Research in Management என்ற நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலராகவும் செயல்படுகிறார். தேசிய அளவில் பல்வேறு வர்த்தக அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். கோவை இந்திய தொழில் கூட்டமைப் பின் தலைவராகவும், இந்திய தொழில் நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார், துணைத்தலைவராக, ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர்,துரை பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அமெரிக்காவில் உள்ள ஸதர்ன் நியு ஹெம் ஷையர் பல்கலை கழகத்திலிருந்து பன்னாட்டு வர்த்தகத்தில் முதுநிலை மேலாண்மை பெற்றுள்ளார். மேலும், ஜவுளித் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டத்தை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பெற்றுள்ளார். மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் செயற்கை பஞ்சு மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (MATEXIL) நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். உபதலைவராக, திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர், எஸ்.கிருஷ்ணகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பி.எஸ்.ஜி. கலைக் கல்லுாரியில் பி.ஏ.(உளவியல்) பட்டம் பெற்றவர். 1980களின் பிற்பகுதியில் வணிகத்தில் நுழைந்தார். சமூகத்திற்கு உதவும் பல்வேறு சி.எஸ்.ஆர். நடவடிக்கைகளில் ஈடுபட்டு ள்ளார். குறிப்பாக, அவரது SAY NO TO CHILD LABOUR, THE SOUTHERN INDIA MILLS’ ASSOCIATION, அமைப்பு திருப்பூரை சுற்றி 1.5 மில்லியன் மரங்களை நட்டுள்ளார் மேலும், அவர ஆலை வளாகத்திலேயே 30,000 மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.