கோவை செப்டம்பர் 19 மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள வைகை நகரை சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) எலக்ட்ரீசியன் . இவர் கோவை சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இவர் கோவையில் வேலை செய்யும் போது மதுரையை சேர்ந்தஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். . 2 பேரும் செல்போனில் காதலை வளர்த்து வந்தனர். நேரம் கிடைக்கும்போது அந்தப் பெண் கோவை வருவாராம். அப்போது கோவையில் பல இடங்களில் சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் பிரேம்குமாருக்கு கோவையில் கணவரை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் “இன்ஸ்டாகிராம் ” மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அவரையும் பிரேம்குமார் காதலிப்பதாக கூறியுள்ளார்..அந்தப் பெண்ணும் பிரேம்குமாருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் பிரேம்குமார் காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். பல மாதங்களாக இப்படி இரட்டை காதல் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பெண் பிரேம்குமாரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அவரைப் பற்றி விசாரித்தார். அப்போது கோவையில் மற்றொரு பெண்ணுடன் பிரேம்குமார் காதல் வாழ்க்கை நடத்துவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்தார். 2பெண்களை காதலித்த பிரேம்குமாரை அவர்கள் கண்டித்தனர். ஒரே நேரத்தில் அவரை சந்தித்து பேச அவர்கள் பிரேம்குமாரின் அறைக்கு வருவதாக செல்போனில் தெரிவித்தனர். 2 பெண்களையும் காதலித்தது அம்பலமானதுடன் ஒரே நேரத்தில் 2காதலிகளும்தன் அறைக்கு வருவதை அறிந்த பிரேம் குமார் செய்வதறியாது திகைத்தார் ..இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த பிரேம் குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது அருகில் இருந்த மின்விசிறியில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த நிலையில் மதுரை காதலியும், கோவை காதலியும் பிரேம்குமார் தங்கி இருந்த வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்கள். செல்போனில் அழைத்தனர். வீடு உள்பக்கமாக தாழ் போட பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரேம்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து இருவரும்,ஏமர்ந்து மோசம் போய் விட்டோமே? என்று கதறி அழுதனர். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ..ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்த எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink1