கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை சரகத்தில் போலீசில் ஆன்லைன் மூலமாகவும் புகார் பெற்று பதிவு செய்யப்படுகிறது. பின்னர் இன்ஸ்பெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்படுகிறது. தமிழக போலீசில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சி .சி. டி. என். எஸ். இணையதளத்தில் புகார் மனுக்களை பதிவு செய்ய முடியும். கோவை சரகத்தில் கடந்த சில மாதங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த இணையதளத்தில் புகார் மனுக்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நில விவகாரம் பொதுவான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் மனுக்கள் வந்துள்ளது .இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தற்போதும் மாநில அளவில் சி. சி. டி .என். எஸ். இணையதளம் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. சி.சி.டி.என்.எஸ். 20 என் “அப்டேட் “செய்யும் பணிகள் நடக்கிறது. விரைவில் ஆன்லைன் மூலமாக புகார்களின் மீது சி. எஸ். ஆர் .பதிவு செய்வது , எப். ஐ .ஆர் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆன்லைன் மூலமாக வழக்குகள் தொடர்பாக சம்மன் அனுப்புதல், வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் தெரிவிப்பது போன்றவையும் நடைமுறைக்கு வந்துவிடும் .கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியகோவை சரகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது .மாவட்ட மாநில எல்லை சோதனை சாவடிகளில் வழக்கமான இடங்களில் சோதனை நடத்துவதை தவிர்த்து புதிய இடங்களில் திடீர் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் பதிவே ற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0