பூந்தமல்லி, கடந்த மாதம் 27 ந் தேதி பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லாரியில் பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் படையினர் பூந்தமல்லி பைபாஸ் பஸ் டிப்போ சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சென்னையை நோக்கி ஒரு லாரி tn 02 bt0384 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குட்கா பொருட்கள் உடன் லாரியை கைப்பற்றி லாரி டிரைவர் விக்னேஷ் வயது 27. தகப்பனார் பெயர் முருகன் ஏகே மோட்டூர். திருப்பத்தூர் என்பவனை கைது செய்து வழக்குப்பதிவுடன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டான். இவ்வழக்கில் தலை மறைவு குற்றவாளி செந்தில் என்கிற கனகலிங்கம் வயது 38. தகப்பனார் பெயர் பெரிய நாடார். இவனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் திருமுல்லைவாயல் காவல் நிலைய குட்கா கடத்தல் வழக்கில் 150 கிலோ குட்கா பொருட்களும் 22.8.2024 ம் தேதி 10.9 டன் குட்கா பொருட்களும் ஆக ஒரு மாதத்தில் மட்டும் 11.4 டன் குட் கா பொருட்களை கடத்திய வழக்கில் தலை மறைவு குற்றவாளி ஆக இருந்த குட் கா கடத்தல் வழக்குகளில் மூளையாக செயல்பட்ட தலை மறைவு முக்கிய குற்றவாளியான 1. செந்தில் என்கிற கனகலிங்கம் வயது 38. தகப்பனார் பெயர் பெரிய நாடார்.விஜயலட்சுமி நகர் ஐயப்பன் தாங்கல் என்பவனை தனிப்படை போலீசார் பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகில் வைத்து கைது செய்து பூந்தமல்லி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட் கா போன்ற பொருட்களை நீண்ட நெடு நாட்களாக குறைந்த விலைக்கு பெங்களூரில் இருந்து லாரிகள் மூலமாக தொடர்ந்து திருட்டுத்தனமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான்.மேலும் குற்றவாளி பல்வேறு குட்கா கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை அடுத்து குற்றவாளியை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத் தப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு குட்கா பொருட்கள் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை கைது செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்ற தனிப்படை போலீசாரை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பாராட்டு தெரிவித்தார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0