கோவை மாநகராட்சி,மத்திய மண்டலம், நஞ்சுண்டாபுரம், 62 வது வார்டு, பிரதான சாலையில் பொது இடத்தில், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், காரில் வந்து, கழிவு குப்பைகளை விதிமீறி வீசி சென்றவர்களை, காரை மடக்கி பிடித்த மாநகராட்சி மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் டி.ஜெகநாதன், உதவியாளருடன் சென்று குப்பை கழிவுகளை காரில் வந்து கொட்டி சென்ற நபர்களுக்கு, அறிவுரை கூறி ரூபாய் 2000, அபராதம் விதித்து உடனடியாக வசூலித்து, எச்சரிக்கை செய்து அனுப் பினார், இதனை கண்ட பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர், இது போன்று கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர், இதனை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் , நேர்மையாக பணி செய்த சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், அவருடன் கண்ணியத்துடன் பணி செய்த,தினேஷ் குமார், கார்த்திகேயனை பாராட்டி ஊக்க படுத்தினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0