பள்ளி மாணவிகளை சில்மிசம் செய்த ஈஷா யோகா மைய டாக்டர் போக்சோவில் கைது

கோவை ,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட,நரசிபுரம் ஊராட்சி, வெள்ளையங்கிரி மலை அடிவார பகுதியில் ஜக்கி வாசு தேவ்,பல ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய யோகா மையம் நடத்தி வருகிறார், இந்த ஈஷா யோகா மையத்தில், ஆன்மீகம், யோகா,தியானம், போன்றவை கற்பிக்க படுகின்றனர், இது தவிர ஈஷா சுற்றியுள்ள கிராம புற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு தன்னார்வ தொண்டு சேவைகளை செய்து வருகின்றனர். இதில் பள்ளி குழந்தைகள் கல்வி தரம் மேம்படவும்,சுற்று புற சுகாதாரம் காக்க மருத்துவ உதவிகளை செய்தும் வருகிறார்கள், இந்த நிலையில் ஈஷா சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவம் பார்க்க நடமாடும் மருத்துவ சேவை மையம் ஒன்றையும் நடத்தி வருகிறது இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என பலர் பணி செய்து வருகிறார்கள் இவர்களுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் ஊழியம் வழங்க படுகிறது. இந்த ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் பணியில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சரவண மூர்த்தி தலைமையிலான மருத்துவ குழு, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வந்தனர், இங்கே பள்ளி மாணவிகளை மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் சில்மிசம் செய்த டாக்டர் சரவண மூர்த்தி, தொடர்ந்து பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வந்ததை மாணவிகள் மிரண்டு போய் தங்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடம் தெரிவித்தனர், அதனை தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, Cr.No:16/24 U/S 9(e) r/w 10 of POCSO Act., பிரிவின் கீழ் டாக்டர் சரவண மூர்த்தியை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் கோவையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.